காதலித்து மணந்த பெண்ணை பிரிந்து செல்ல முடியாது என்று மறுத்த காதலன் கண்களை காதலி உறவினர்கள் கைகளால் தோண்டி எடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியாவைச்சேர்ந்த ரகு(24) ஜிம் இன்ஸ்பெக்டர். இவர் அனுஷாவை காதலித்து
வந்தார். இந்த காதலுக்கு அனுஷா வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.
இதனால் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கர்நாடகாவில்
உள்ள கோயிலில் திருமணம் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர்.
உறவினர்கள் எல்லோருக்கும் இப்போது கோபம் போயிருக்கும். அதனால் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினர்.
ஆனால் கொஞ்சம் கோபம் தனியாத உறவினர்கள் இவர்களை கண்டதும் ஆத்திரத்தில் அடித்து
உதைத்துள்ளனர். பின்பு அனுஷாவை விட்டு பிரிந்து செல்லுமாறு ரகுவை எச்சரித்தனர்.
வாழ்ந்தாலும் இறந்தாலும் ஒன்றாகத்தான் இருப்போம்; பிரியமாட்டோம் என்று ரகு பிடிவாதமாக இருந்தார்.
இதனால் அனுஷாவை ஒளித்து வைத்துக்கொண்டு, ரகு எங்கள் பெண்ணை கடத்தி சென்றுவிட்டான் என்று ராம்நகர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
ராம்நகர் எஸ்.பி. கவுசலேந்திரகுமார் ரகுவை அழைத்து விசாரித்தார். அப்போது ரகு, அனுஷா தனது
மனைவி என்றும், அவரின் உறவினர்கள்தான் மறைத்து வைத்துள்ளனர் என்றும் கூறினார்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை கேட்டார் எஸ்.பி. அவசரத்தில் நடந்ததால் ஆதாரம் எதுவும்
இல்லை என்று கூறினார் ரகு. இதையடுத்து ரகுவை எச்சரித்து அனுப்பினார் எஸ்.பி.
வெளியே வந்த அவருக்கு அதிரிச்சி காத்திருந்தது. அனுஷாவின் உறவினர்கள் கொலைவெறியோடு காத்திருந்தனர். ரகு மீது பாய்ந்து கண்மூடித்தனமாக தாக்கினர். ரகுவின் கண்கள் மீது கைகளால் குத்தினர். விரலை விட்டு தோண்டினர். அலறித்துடித்த ரகு ரத்தம் வழிந்து மயங்கி விழுந்ததும் அவரை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
பின்பு ரகு போலீசாரால் பெங்களூர் நாராயண நேத்ராலயா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையின் சேர்மன் புஜன்செட்டி ரகுவின் மருத்துவமனை செலவுகளை ஏற்பதாக கூறியுள்ளார்.
ரகுவின் வலது கண்100%ம், இடது கண் 95%ம் சேதமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு பார்வை
திறன் இருக்காது என்று புஜன்செட்டி கூறியுள்ளார்.
ராம்நகர் தனிப்படை, அனுஷாவின் உறவினர்களை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment