உலக கோப்பை போட்டிகளால் தமிழ் திரையுலகம் மார்ச் மாதம் ரொம்பவே பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இம்மாதம் ரிலீஸ் ஆன படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
குறிப்பாக இந்தியா விளையாடிய நாட்கள் அனைத்துமே பல தியேட்டர்கள் வெறிச்சோடின. பல படங்கள் கிரிக்கெட் உலக கோப்பை முடிந்த பின்னர் தான் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டன. அதை மீறி தைரியமாக வெளியான படங்களுக்கு ரசிகர்கள் தியேட்டருக்கு வராததால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் மார்ச் மாதம் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் சோதனையாகவே முடிந்தது. உலகக் கோப்பை முடியும் நாளான ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு, தங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
ஏப்ரல் 8ம் தேதி 'மாப்பிள்ளை', 15ம் தேதி 'கோ' என பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையாக வெளிவர இருக்கின்றன. மார்ச் தங்களைக் கைவிட்டாலும் ஏப்ரல் கண்டிப்பாக கை கொடுக்கும் என்று நம்புகிறார்கள். நாமும் தான்!
No comments:
Post a Comment