பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து மத்திய மந்திரி நெப்போலியன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலத்தில் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது மத்திய மந்திரி நெப்போலியன், நடிகை குஷ்புவுடன் இணைந்து எட்டுப்பட்டி ராசா படத்தில் இருந்து பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடலை பாடி பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அதனைத்தொடர்ந்து நக்கசேலம், அம்மா பாளையம், குரும்பலூர் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் பகுதிகளில் நடிகை குஷ்பு பெரம்பலூர் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:-
குஷ்பு வட இந்திய பெண் பிரச்சாரத்திற்கு வந்து விட்டார் என்கிறார்கள்.கடந்த 25 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் தமிழச்சியாக வாழ்ந்து வருகிறேன்.அதற்காக பெருமைப்படுகிறேன். இங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டம், பணத்துக்கும், சீட்டுக்கும் வந்த கூட்டம் அல்ல.எந்த தகுதியும் இல்லாத மான ரோசம் இல்லாத கூட்டணியை புறக்கணியுங்கள்.
என்றும் உங்களுக்காக உதிக்கும் உதயசூரியன் கூட்டணியை ஆதரியுங்கள். இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ள நான் தி.மு.க. வெற்றி விழாவிற்கும் என் சக நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியன் தொகுதி பெரம்பலூர் என்பதால், கட்டாயம் இங்கு வருவேன்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
No comments:
Post a Comment