விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு தெய்வ திருமகன் என்று பெயர் சூட்டப் பட்டிருப்பதாக பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டன. இருந்தாலும், முறைப்படி அறிவித்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜன்.
கையிலிருக்கிற ரிமோட் மூலம் விக்ரம் திரையை விலக்க, இதுவரை அவரது கெட்டப் குறித்த மர்மமும் விலகியது அதோடு சேர்ந்து...! அந்த பேனரில் 'நான் கடவுளின் குழந்தை' என்பது போலவே சிரித்துக் கொண்டிருந்தார் மன வளர்ச்சி குன்றிய விக்ரம்!
அதென்னவோ தெரியல. எனக்கு நல்ல நல்ல இயக்குனர்கள் கிடைக்கிறாங்க. இந்த படத்தில் விஜய் கிடைத்த மாதிரி என்று சொன்ன விக்ரம், தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கணும்னு விரும்புறேன் என்றார். அதை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி திருப்பி ஒப்பித்தார் விஜய். இப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட்டை நான் ஆச்சர்யமா பார்க்கிறேன். விக்ரம் சார் படங்களை மட்டுமே தொடர்ந்து இயக்கணும்னு ஆசைப்படுறேன் என்றார்.
இந்த படத்தின் கதையை கேட்டதும் ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டார் விக்ரம். உதவும் கரங்களுக்கு போய் அங்குள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சுட்டார். தினமும் அங்கு போவதும் குறிப்பெடுத்துட்டு வர்றதுமாக இருந்தார். இந்த படத்தில் அவருக்கு இரண்டாவது முறையா தேசிய விருது நிச்சயம் என்று விஜய் சொன்னதில் சிறிதளவும் ஜால்ரா இல்லை என்பதுதான் நிஜம்.
ஒரு நிமிட ட்ரெய்லர் ஒன்றை திரையிட்டார்கள். அது சொன்னது இப்படத்தின் அத்தனை ஆச்சர்யங்களையும்!
ஆமா... அனுஷ்கா ஏங்க வரல?
No comments:
Post a Comment