தெய்வத்திருமகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதேன் என்று அனுஷ்கா கூறினார். விஜய் இயக்கியுள்ள ‘தெய்வத்திருமகன்’ படத்தில் விக்ரம், அமலா பாலுடன் நடித்துள்ளார் அனுஷ்கா. பாடல் காட்சியில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்துக்காக, ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலை முதலில் கேட்டபோது என் கண்களில் இருந்து தண்ணீர் வந்துவிட்டது. என்னையறியாமல் அழுதேன். அந்தளவுக்கு சிறப்பான பாடல் அது. இப்படியொரு பாடலை கொடுத்த இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு எனது பாராட்டுகள். இதை பாடிய சைந்தவியையும் வாழ்த்துகிறேன். அவர்தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் வருங்கால மனைவி என்பதையும் அறிந்தேன். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப் பாடலில் எனக்கு நடனம் ஆடுவதுபோல் காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பாடலில் நீரவ் ஷாவின் திறமையான ஒளிப்பதிவு கண்டிப்பாகப் பேசப்படும் விதமாக இருக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

No comments:
Post a Comment