சீயான் விக்ரம் கணிப்பில் மிஸ் ஆகி கைநழுவிப் போன படங்கள் கஜினி, காக்க காக்க! அன்று காக்க காக்க கதை சொன்னதுபோலவே ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கௌதம் மேனன் விக்ரமுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட விக்ரம் உருகிப் போய்விட்டாராம். ‘காக்க காக்க’ கை நழுவிப் போனாலும் கௌதமும் விக்ரமும் இணையும் வாய்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது. தெய்வத் திருமகன் படப்பிடிப்பு முடிந்து சுசீந்திரனின் ராஜபாட்டை படத்துக்காகத் தன்னை ரிலாக்ஸ்டாகத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், கௌதம் மேனனிடம் கதைக் கேட்ட விக்ரம், நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை ஹிந்தியில் இயக்க இருக்கும் கௌதம் அதை முடித்துவிட்டு வந்ததும் கௌதம் படத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
இதற்கிடையில் இயக்குனர் ஷங்கரின் கிராஃபிக்ஸ் உதவியாளர் கண்ணனின் இயக்கத்தில் கரிகாலன் என்ற படத்தில் நடிக்க விகரம் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது
No comments:
Post a Comment