அசத்தல் நாயகி என்ற பட்டத்தை விட, அலட்டல் நாயகி என்ற பட்டம்தான் திவ்யா ஸ்பந்தனாவுக்கு சரியாக இருக்கும். கன்னட தயாரிப்பாளர் சங்கம் போட்ட தடைகள் என்னை ஒன்றும் செய்யாது என்று துணிச்சல் நாயகியாகப் பேட்டி கொடுத்திருக்கும் திவ்யா, கௌதம் மேனன் தன்னை படத்தில் இருந்து தூக்கியது தனக்கு தெரியாது, அவர் என்னை அப்படிச் செய்துவிடமாட்டார். அவர் எனது நெருங்கிய நண்பர் என்று கொஞ்சிக் கொஞ்சி சொல்லியிருக்கிறார்.
முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பதை கௌரவக் கொள்கையாக கடைப்பிடித்து வரும் திவ்யா ஸ்பந்தனா, அந்தக் கொள்கையைச் சற்றே தளர்த்தியிருக்கிறார் ஒரு அறிமுக ஹீரோவுக்காக. அவர் காதல் டூ கல்யாணம் படத்தின் ஹீரோ. பிபிஏ படித்துவிட்டு நடிக்க வந்திருக்கும் சத்யாவுக்கு இன்னும் திவ்யாவுடன் நடிக்கிறோம் என்ற பிரமிப்பு மாறவில்லை. அவங்க சூர்யா, தனுஷ் கூடவெல்லாம் நடிச்சவங்க. கன்னடத்தில் முன்னணி ஸ்டார். எந்த ஃபீல்டுக்கு போனாலும் புது ஹீரோக்கள்கூட நடிக்க மாட்டாங்க… ஆனா என் கூட நடிக்கிறாங்கன்னா… அவங்க அண்ணனுக்கு தர்ற மரியாதைய நினைச்சு சந்தோஷமாக இருக்கு என்கிறார் இந்த சத்தியா!
யார் இந்த சத்யா என்கிறீர்களா? வேறு யார் …ஆர்யாவின் உடன் பிறந்த தம்பி.
nalla mariyaathai..
ReplyDelete