தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் சார்பில், கோபியில் கொ.மு.க., வேட்பாளர் சிவராஜ் அறிமுக கூட்டம் நடந்தது.
அங்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘’தி.மு.க.,வைப் பற்றி சில மாதங்களாக கடுமையாக பேசி விட்டு, தற்போது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச வந்து விட்டார் என, என்னைப் பற்றி சிலர் நினைக்கக் கூடும்.
கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் யாரும் அடிமை இல்லை. கூட்டணி என்று வந்து விட்டால் 100 சதவீத உழைப்பை கொடுப்பவன் காங்கிரஸ்காரன்.
கோபி தொகுதியில் 29 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்த செங்கோட்டையன் என்ன செய்தார் என பட்டியல் போட முடியாது.
ஆனால், நான் ஐந்து ஆண்டுகள் கோபி எம்.பி.,யாக, மத்திய அமைச்சராக இருந்த போது, கொடிவேரி அணையை சுற்றுலா தலமாக்கியது உள்ளிட்ட பல பணிகளை செய்துள்ளேன்.
எம்.ஜி.ஆரிடம் நெருக்கமாக இருந்த முத்துசாமி, ஈரோட்டுக்கு பல பணிகளை செய்துள்ளார். ஆனால், செங்கோட்டையன் கோபிக்கு எந்த பணிகளையும் செய்யவில்லை.
மாறாக கீரிப்பள்ளம் ஓடை மறுசீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற வேலைகளை செய்ய விடாமல் தடுத்தவர் செங்கோட்டையன். மீண்டும் அவர் கோபியில் ஜெயித்தால், போயஸ் கார்டனுக்கு சேவை செய்ய போய்விடுவார்.
கோபி முற்றிலும் பின்தங்கிய பகுதியாக மாறி விடும். கோபியை காப்பாற்ற வேண்டுமானால் செங்கோட்டையன் மீண்டும் ஜெயிக்கக் கூடாது’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment