சென்னை மாநகரம் அ.தி.மு.க.வின் கோட்டை, இதை வரும் தேர்தலிலும் நிரூபிப்போம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்னையிலிருந்து சனிக்கிழமை விமானம் மூலம் ஜெயலலிதா திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை, போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்படும்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ’’2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகை குறித்து இப்போது கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கலான பிறகே எனது கருத்தை கூற முடியும்.
மதுரையில் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், இப்போதுதான் சட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதைக் காட்டுகிறது.
சென்னை மாநகரம் ஏற்கெனவே அ.தி.மு.க.வின் கோட்டையாகத்தான் உள்ளது. இதை வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் நிரூபிப்போம்’’ என்றார்.
No comments:
Post a Comment