கடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. புதுவை மாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. இங்கிருந்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். நிவாரண பணிகளை செய்வதற்காக நித்யானந்தா சாமியார் தனது பக்தர்கள் 600 பேருடன் ஏம்பலத்துக்கு வந்துள்ளார்.
இவர்களில் 35 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அங்கு பெரிய அளவில் பந்தல் அமைத்து சமையல் கூடத்தை உருவாக்கி உள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களை வைத்து சமைத்து வருகின்றனர்.
தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து அருகில் உள்ள புதுவை, கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். உணவு பொருட்களை சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. சமையல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் முடி உணவில் விழுந்து விடாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்துள்ளனர். கையுறையும் அணிந்திருக்கிறார்கள்.
தரமான பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பல ஆயிரம் கிலோ காய்கறிகள், அரிசி மூட்டைகள், ரவை போன்றவை குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து 24 மணி நேரமும் சமையல் நடந்து வருகிறது. அவற்றை நித்யானந்தரே நேரடியாக கண்காணிக்கிறார்.அவரே சமையல் பணிகளிலும் ஈடுபடுகிறார்.
தயாரிக்கப்பட்ட உணவுகளை 15 வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று கிராமங்களில் வழங்கி வருகிறார்கள். புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நித்தியானந்தா ஆசிரமம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
4 ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து கிராமங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். மின் இணைப்பு இல்லாத ஊர்களில் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு சப்ளை செய்கின்றனர்.
கடந்த 2-ந்தேதியில் இருந்து நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப இன்னும் 3 அல்லது 4 நாட்கள் வரை உணவு வழங்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஆசிரம நிர்வாகிகள் கூறினார்கள்.
நித்தியானந்தர் தொலைந்து போனவற்றை திரும்பிப் பெற அன்னதானம் கொடுக்கிறார்.கிடைக்குமா?நம் நாட்டில் எல்லாம் கிடைக்கும்.தமிழன் பொங்கி எழுவான் அதே வேகத்தில் புஸ்வாணமாய் கீழே விழுவான். ஆரியத்தை,அனுமானை,இராமனை தூக்கி தலையில் கொண்டாடும் தமிழன்,அதே அளவுக்கு திருமறையாம் திருக்குறளுக்கு கொடுப்பதில்லை.சொல்லுகிற அளவுக்கு தொலைக்காட்சி போதகர்களிடம் எதுவும் இல்லை.சொல்லுகிற அளவுக்கு மேலேயே விழியே பேசுவிடம் இருக்கிறதே.கொஞ்சம் அதிகமாகவே கொடுக்கலாமே.
ReplyDelete