சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரி குமார் என்பவர் தனக்கு சொந்தமான ரூ.5 1/2 கோடி மதிப்பிலான நிலத்தை மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்பட 5 பேர் மிரட்டி வாங்கியதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றார். முன்ஜாமீன் உத்தரவுப்படி உதயநிதி ஸ்டாலின் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில மோசடி குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி இன்ஸ்பெக்டர் காதர் பாஷா முன்னிலையில் கையெழுத்திட்டார்.
No comments:
Post a Comment