பிரபல இந்தி நடிகை இஷா ஷெர்வானி. இவர் தற்போது கமலஹாசனுடன் “விஸ்வரூபம்” படத்தில் நடிக்கிறார். இஷா ஷெர்வானிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் ஜாகீர்கானை மணக்கிறார். இஷா ஷெர்வானியும் ஜாகீர்கானும் 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 2005-ல் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி நடந்த போது அங்கு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க இஷா ஷெர்வானி சென்று இருந்தார்.
அப்போது இருவரும் நட்பானார்கள். பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்கு முன்னதாக கைவசம் உள்ள படங்களை முடித்து விட இஷா ஷெர்வானி திட்டமிட்டுள்ளார். திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
No comments:
Post a Comment