நயன்தாரா, சினேகா, ஜெனிலியா மூவருக்கும் இவ்வருடம் திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கியுள்ளன. ஜெனிலியா திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கிறது. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார். இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்தது.
இரு வீட்டு பெற்றோரும் இவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் திருமணம் நடை பெறும் என்று இரு மாதங்களுக்கு முன் அறிவித்தனர். திருமணத்தக்கு பின் சினிமாவுக்கு ஜெனிலியா முழுக்கு போடுவார் என தெரிகிறது.
இதற்காக கைவசம் உள்ள படங்களை இந்த மாத இறுதிக் குள் முடித்து விட திட்டமிட்டுள்ளார். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் கடந்த வருடமே திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்து விட்டார். நயன்தாராவும் திருமணத்துக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
அவர் கடைசியாக தெலுங்கில் நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் சமீபத்தில் ரிலீசானது. அதன்பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. எதையும் ஏற்கவில்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினேகாவும் பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர்.
பிரசன்னா இந்த காதலை வெளிப்படையாக சமீபத்தில் அறிவித்தார். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறினார். சினேகா புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. இவர்கள் திருமணமும் மூன்று மாதங்களில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment