தன் அடுத்த படம் யாருக்கு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜீத்.
ஏ எம் ரத்னம் மேற்பார்வையில், ஸ்ரீசத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
முதல் முறையாக இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைகிறார் ஆர்யா.
அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாராவும், ஆர்யாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், "வெற்றிப் பட கூட்டணியான அஜீத் - விஷ்ணுவர்தன்-யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர்.
கதை திரைக்கதையை விஷ்ணுவர்தனுடன் இணைந்து எழுதியுள்ளனர் எழுத்தாளர்கள் சுபா. பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். சுபா வசனம் எழுதுகிறார்கள். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.
முதல்கட்ட படப்பிடிப்பு வரும் மே 31-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் முடிந்த பிறகு, விஜயா நிறுவனத்தின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment