நண்பன் படத்திற்குப் பிறகு பொறுமையாக அடுத்த கதையை எழுதி இப்போது ஹீரோவுக்காக காத்திருக்கிறார். ஷங்கரின் அடுத்த படத்தில் விக்ரம் தான் ஹீரோ எனவும் படத்திற்கு ’தென்றல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவினாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
ஆனாலும் ஷங்கரின் அடுத்த படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படும் AGS தயாரிப்பு நிறுவனதிற்கு, ரஜினி ஹீரோவாக நடிப்பதில் தான் உடன்பாடாம்.
அதனால் ஷங்கரும், தயாரிப்பு நிறுவனமும் ரஜினியை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.
கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்ததும் ’ராணா’ துவங்கப்படும் என கே.எஸ்.ரவிகுமார் கூறியிருப்பதால், ஷங்கர் தரப்பு முயன்றாலும் நல்ல பதில் கிடைக்காது என்கிறார்கள்.

No comments:
Post a Comment