20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். மும்பையில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
கிரிக்கெட் அணியில் உள்ள இளைஞர்கள் ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, மனோஜ் திவாரி போன்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்து, தகுந்த ஆலோசனைகளை பெற்று வளர்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது எனது மகன் வயதில் உள்ளவர்கள் எல்லாம் 20 ஓவர் கிரிக்கெட், ஐ.பி.எல். கிரிக்கெட்டை பார்த்து வளருகிறார்கள்.
இவர்களுடைய விருப்பம் இது தான். எனவே 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது ஒரு சவாலாக இருக்கும். இப்போதைக்கு இது ஒரு பிரச்சினையாக இல்லை என்றாலும் அடுத்த 10 ஆண்டுகளில் நிச்சயம் ஒரு சவாலாக எழும். எனவே இப்போதில் இருந்தே அதை சரிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment