கடந்த சிலநாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து சென்ற மீனவர் செந்தூர்பாண்டி உள்பட 5 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து மன்னார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கரை திரும்பாத செந்தூர்பாண்டி உள்பட 5 மீனவர்களை தேடி கார்டன் என்பவரின் தலைமையில் 5 பேர் கச்சத்தீவு பகுதிக்கு சென்றனர். அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.
இதற்கு எதிர்பபு தெரிவித்தும், கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
இதனையடுத்து மத்திய அரசு இதுதொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செந்தூர்பாண்டி, கார்டன் உள்பட 10 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலையான மீனவர்கள் நாளை ராமேசுவரம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment