தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வை 6 1/2 லட்சம் பேர் எழுதினார்கள். ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடைபெற்றது. இந்த 2 தேர்வுகளும் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினார்கள்.
தேர்வு எழுத போதிய கால அவகாசம் இல்லை. 150 கேள்விகளுக்கு 90 நிமிடம் போதவில்லை. ஒவ்வொரு வினாவிற்கும் செயல் முறை அடிப்படையில்தான் விடை எழுத வேண்டிய நிலை இருந்தது. 2 1/2 மணி நேரத்தில் எழுத வேண்டிய தேர்வை ஒன்றரை மணி நேரத்தில் நடத்தியது சரியல்ல என்று தேர்வர்கள் குமுறினார்கள்.
தேர்வு எழுதிய அனைவருக்கும் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் விடைகளை ஒப்பிட்டு எந்தெந்த விடைகள் சரியாக எழுதி இருக்கிறோம் என்பதை தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே அறிந்து கொள்ள முடியும். இதற்காக 150 கேள்விக்கான விடைகளை தேர்வு வாரியம் முதன் முதலாக வெளியிடுகிறது. இன்னும் 2 வாரத்தில் விடைகள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
ஆசிரியர் தகுதி தேர்வு முடிந்து விடைத்தாள்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து விட்டன. கேள்விக்கான சரியான விடைகள் இன்னும் 2 வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்விற்கு போதிய கால அவகாசம் இல்லை என்ற புகார் வந்துள்ளது. அரைமணி நேரம் கூடுதலாக ஒதுக்கி இருக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கருத்துக்கள் அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு நேரத்தை கூட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும். ஆனால் நடந்து முடிந்த தேர்விற்கு எதுவும் செய்ய வழியில்லை. இது மத்திய அரசின் சட்டத்தின்படியும், விதிமுறைகளின் படியும் கேள்வித்தாள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் நடந்த தமிழ்நாடு அரசு தேர்வாணைய குரூப்-4 தேர்வை 10 லட்சம் பேர் எழுதினார்கள். இந்த தேர்விற்கான விடைகள் அன்று இரவு 9 மணிக்கே இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டன. அவற்றை தேர்வர்கள் பார்த்து சரியான விடைகள் எத்தனை, தவறான விடைகள் எத்தனை என்பதை தேர்வு எழுதிய அனைவரும் அன்று இரவே பார்த்தனர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வுக்கான விடைகள் மட்டும் 2 வாரம் கழித்து ஏன் வெளியிடுகிறார்கள். இந்த தாமதத்திற்கான காரணம் என்ன என்று பல்வேறு சந்தேகங்களை தேர்வர்கள் எழுப்புகிறார்கள்.

No comments:
Post a Comment