தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் மூன்று பேரின் செயல்பாடுகளில் முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். மேலும் அதிமுகவின் மிக முக்கியப் பதவியான தலைமை நிலைய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவரை வருவாய்த்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் செங்கோட்டையன் வகித்து வந்த தலைமை நிலையச் செயலாளர் பதவியையும் முதல்வர் ஜெயலலிதா பறித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து அதிமுக மூத்த நிர்வாகியிடம் விசாரித்த போது, செங்கோட்டையனை போல் இன்னும் இரண்டு அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கோபப் பார்வையில் சிக்கியுள்ளனர். செங்கோட்டையனை போன்று அவர்கள் இருவரையும் நேற்று மாலை 4.30 மணி அளவில் போயஸ் கார்டன் வரவழைத்த ஜெயலலிதா, அவர்களிடம் சில நிமிடங்கள் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார் என்றார்.
அதில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு அமைச்சர், மத்திய மண்டலத்தில் உள்ள ஒரு அமைச்சர் என இருவர் சிக்கி தப்பியதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் இருவரையும் மிகவும் கவனமாகக் கண்காணிக்க உளவுத்துறை போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment