கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆண்டிபட்டி, புதுக்கோட்டை, புவனகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனை எதிர்த்து குப்புசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில வழக்கு தொடர்ந்தார். அதில், 2க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது சட்டவிரோதம் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் குப்புசாமி கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்பட்ட காரணங்களால் ஜெயலலிதா ஆஜராக முடியவில்லை என்றும், எனவே வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

No comments:
Post a Comment