கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. 2009-ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. ஆனால் பல வீரர்கள் அங்கு செல்ல தயங்கினர். இதையடுத்து இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் அவ்வப்போது பேச்சு நடத்தி வந்தனர்
இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவரும் இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இப்போட்டிகளை மொகாலி, டெல்லி, தர்மசாலா ஆகிய இடங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment