துபாயில் ஒரு பாரில் குடிக்க வந்த பெண்ணின் பின்பக்கத்தைக் கிள்ளியதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த நபருக்கு அந்த ஊர் ஜட்ஜ் 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டார். இதைக் கேட்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஸ்டீவன் ஷெரீப். வயது 43 ஆகிறது. இவர் ஒரு பிசினஸ்மேன். துபாயில் தங்கியுள்ளார். சமீபத்தில் இவர் ஒரு பாருக்குப் போயுள்ளார். அங்கு ஏராளமான பேர் கோப்பையுடன் இருந்துள்ளனர். லேசான வெளிச்சம் மட்டுமே இருந்துள்ளது அந்த பாரில். அப்போது 23 வயதான இளம் பெண் ஒருவரை நெருங்கிய ஸ்டீவன், அந்தப் பெண்ணின் புட்டத்தைப் பிடித்துக் கிள்ளியதாக கூறப்படுகிறது.
ஷாக் ஆகிப் போன அந்தப் பெண் கத்தியுள்ளார். இதையடுத்து அவருடன் வந்திருந்த அவரது ஆண் நண்பருக்கும், ஸ்டீவனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதன் இறுதியில் ஸ்டீவனை, அந்தப் பெண்ணின் நண்பர் சரமாரியாக தாக்கி விட்டார்.
இறுதியில் போலீஸார் வந்து ஸ்டீவனைக் கைது செய்தனர். வழக்குத் தொடரப்பட்டது. கோர்ட்டில் நிறுத்தப்பட்டார் ஸ்டீவன். கோர்ட்டில், பெண்ணின் புட்டத்தை கிள்ளியதற்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைக் கேட்டதும் ஸ்டீவனும், அவரது மனைவி பெடினாவும் கடும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஸ்டீவன் கூறுகையில், இது கேலிக்கூத்தாக உள்ளது என்றார் அவர்.
அவரது மனைவி பெடினா கூறுகையில், எனது கணவருக்கு ஒரு பெண்ணை எப்படிக் கவருவது என்று கூட தெரியாது. அவ்வளவு அப்பாவி அவர். அவருக்குப் போய் இப்படி ஒரு தண்டனையா என்று குமுறினார்.
ஆனால் ஷெரீப் கிள்ளியதாக கூறப்படும் பெண் கூறுகையில், எனது இடது புட்டத்தை அழுத்தமாக கிள்ளினார். மேலும் எனது இரு கால்களுக்கும் இடையே கையை விட்டு தடவினார் என்று கூறினார். அதேசமயம், இதைச் செய்தவர் ஷெரீப் என்று அவர் உறுதியாகத் தெரிவிக்கவில்லை. அப்போது அந்த இடத்தில் ஷெரீப்தான் இருந்தார் என்பதால் அவர் மாட்டியுள்ளார்.
கடந்த 7 வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார் ஷெரீப். இவருக்கும், பெடினாவுக்கும் திருமணமாகி 14 வருடங்களாகிறதாம். இவரது மனைவி டென்மார்க்கைச் சேர்ந்தவர். கோபன்ஹேகனில் இவர் வசித்து வருகிறார். மாதம் ஒருமுறை தனது கணவரைப் பார்க்க துபாய் வந்து செல்கிறார்.
6 மாத சிறைத் தண்டனை முடிந்ததும் ஷெரீப் அவரது நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார். இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய விரும்புவதாக கூறிய ஷெரீப், ஆனால் அதற்கான செலவை தன்னால் சமாளிக்க முடியாத அளவு பொருளாதார நிலை இருப்பதாக சோகத்துடன் கூறினார்.
No comments:
Post a Comment