7-வது ஊதியக்குழுவை அமைக்கக்கோரி மத்திய அரசு ஊழியர்கள் பாராளுமன்றம் முன் நாளை மறுநாள் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் தமிழ் மாநில குழு பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கி ஊழியர்களுக்கும், எல்.ஐ.சி. ஊழியர்களுக்கும் அடிக்கடி சம்பளவிகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வாறு சம்பள விகிதத்தில் மாற்றம் வர பல வருடங்கள் ஆகின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷனை உடனே அமைக்கவேண்டும். 50 சதவீத பஞ்சப்படியை சேர்த்து வழங்கவேண்டும். புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
ஏன் என்றால் இந்த திட்டத்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிஓய்வு பெற்றபிறகு பென்சன் போல கிடைக்கக்கூடிய தொகை வரும் என்று உறுதி கூறமுடியாது. விலைவாசி உயர்வு உயர்ந்துகொண்டே போகிறது. பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பல முறை உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர் இறந்தால் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்குவதில் உள்ள பல விதிமுறைகளை தளர்த்தவேண்டும்.
இப்படி 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் பாராளுமன்றத்தை நோக்கி 26-ந் தேதி ஊர்வலமாக சென்று பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்றம் நடக்கும் தேதியில் அதாவது டிசம்பர் 4-ந் தேதி அல்லது டிசம்பர் 11-ந் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் 12 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
அந்த வேலை நிறுத்தத்தில் வருமான வரித்துறை, தபால்- தந்தி துறை, சாஸ்திரி பவன், கல்பாக்கம் அணுமின் நிலையம், ராஜாஜி பவன் உள்ளிட்ட பல மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு எம்.துரைப்பாண்டியன் தெரிவித்தார். பேட்டியின்போது சங்க பொருளாளர் ஏ.சுந்தரம், வருமானவரி ஊழியர்கள் சம்மேளன தலைவர் சேஷாத்ரி, பொதுச்செயலாளர் வெங்கடேசன், சாஸ்திரி பவன் மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சாம்ராஜ், எழுது பொருள் அலுவலக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment