கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சத்யா (வயது 15) பெரம்பலூர் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்த போது கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், உள் பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் விசாரணைக்காக பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கொலையுண்ட சத்யாவின் தந்தை சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு நான்கு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. எனது மூன்றாவது மகள் சத்யா அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஒரு மாதத்திற்கு முன் பீர்மேடு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் என்னை சந்தித்து தமிழ்நாட்டில் பெரம்பலூரில் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வை எங்களுக்கு தெரியும். உன் மகளை படிக்க வைக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.
இதை நம்பிய நானும் எனது மனைவியும் சத்யாவை பெரம்பலூர் அனுப்ப சம்மதித்தோம். எங்கள் மகள் பலாத்காரம் செய்யப்பட்டு பலிகடா ஆகிவிட்டாள். கடந்த சில தினங்களாக என்ன செய்வது என்பதை அறியாமல் குழம்பி போய் உள்ளோம்.
கேரளாவுக்கு சென்று எனது மகள் பிரேதத்தை பார்த்த போது தான் உடலில் காயம் இருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து பீர் மேடு போலீசில் புகார் செய்தோம். போலீசில் எல்லா விபரங்களையும் நாங்கள் சொல்லிவிட்டோம். என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் எங்களுக்கு நீதிகிடைக்கச் செய்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

No comments:
Post a Comment