நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக பாரதீய ஜனதா அதரவு வேட்பாளரான பி.ஏ.சங்மா போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தனக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி தங்களது ஆட்சி அதிகார செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி, வாக்குறுதியளித்து கையூட்டு வழங்கி வெற்றி பெற்றதாக பி.ஏ.சங்மா கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடத்தை அவர்களின் மேன்மையை குறிக்கணும். தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர் அதை ஏற்க முடியாமல் விரக்தியில் வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றும் நீங்கள் ஒன்றை அடைய முடியாதபோது அந்த பழங்கள் புழிக்கும் என்றுதான் கூறுவீர்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.
பி.ஏ. சங்மாவின் முரண்பாடான இந்த கருத்தை ஒதுக்கி தள்ளிய மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜனார்த்தனன் த்வேதி அப்படி ஒரு குறுகியப் பார்வையுடன் ஒருவர் பேசக்கூடாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment