முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதி வெளிவந்துள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில், ‘கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்குவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது அவரை பெரும் சர்ச்சைக்கு ஆளாக்கியுள்ளது.
இதற்கு சில அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை காட்டி விமர்சித்து வருகின்றனர்.
கலாமின் இந்த கருத்து குறித்து சரத்பவார் கூறுகையில்:
கலாமுக்கு தாமதமாக சுய உணர்வு வந்துள்ளது. இந்த கருத்தை வெளியிட்டு அவரது செல்வாக்கை வலிமையாக்க நினைக்கிறார். மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள்; ஆனால் இப்பொழுது இத்தகைய கருத்துக்கள் வெளியிடப்பட்ட பிறகு வருத்தப்பட வைக்கிறது என்றார்.
இதேபோல், சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கலாமை சுயநலமிக்கவர், போலி வேஷக்காரர் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற விமர்சனங்களுக்கு அப்துல் கலாம் பதிலளித்ததாவது:
2004-ல் சோனியாவை பிரதமராக அறிவிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை என எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். அரசியலமைப்பின்படி அவர் பிரதமராவதற்கு தகுதி உடையவர். உச்ச நீதிமன்றமும் அவரது குடியுரிமையை உறுதி செய்தது. அதனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அவர் விருப்பப்பட்டால் அவரை பிரதமராக்கலாம் என கருதினேன். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அவர் தலைமை வகித்து மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார் என கூறினார்.

No comments:
Post a Comment