கோத்ரா ரயில் எரிப்புக்கு பிந்தைய குஜராத் வன்முறைகள் இன்னமும் ஒரு கரும் புள்ளியாகத்தான் இருக்கிறது...
இந் நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முதல் முறையாக உருது மொழியில் வெளியாகும் வார ஏட்டுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், குஜராத் வன்முறைகளில் தமக்கு தொடர்பில்லை.. தாம் தவறு செய்திருந்தால் தம்மை தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார்.
சரி இந்த "உருது" மொழி ஏட்டுக்காக பேட்டி எடுத்தவர் யார்? மாநிலங்களவை முன்னாள் எம்.பியும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான ஷாகித் சித்திக்தான். அந்த வார ஏட்டில் நரேந்திர மோடியின் பேட்டி கவர் பேஜ் ஸ்டோரியாக வந்திருக்கிறது. மொத்தம் 6 பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இந்துராஷ்டிரம், தீவிரவாதிகள் என பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கும் நரேந்திர மோடி, கோத்ரா ரயில் எரிப்புகளுக்குப் பிந்தைய மத வன்முறைகள் பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால் இந்த வன்முறைகளுக்கு தாம்தாம் காரணம் என்பதைப் போல ஊடகங்கள் சித்தரிக்கின்றன... அப்படி என் மீது தவறு இருப்பது உண்மையானால் என்னை தூக்கிலிடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
சரி..சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர், நரேந்திர மோடியை முன்னிறுத்த வேண்டிய தேவை என்ன வந்தது? அப்படியனால் மோடியை சமாஜ்வாதி கட்சி ஏற்கிறதா? என்று இயல்பாக எழும் கேள்வியை நிராகரிக்கிறார் சித்திக்,. தாம் ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலேயே இந்த பேட்டியை எடுத்தேன்.. இதற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் முலாயம்சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.
சரி பேட்டி எடுக்க தோன்றியது எப்படி? என்பதற்கும் ஒரு விளக்கம் வைத்திருக்கிறார் சித்திக்..மும்பையில் திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் மற்றும் வசன கர்த்தா சலிம் கான் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது குஜராத் பற்றிய பேச்சுகளும் வந்தது. அப்போது மகேஷ்பட்தான் கூறினாராம், எல்லாவற்றுக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்று.. இந்த உந்துதலிலேயே நரேந்திர மோடியை பேட்டி எடுத்தேன் என்கிறார் சித்திக்.
இது உண்மைதானா? என்று மகேஷ் பட்டிடம் கேட்டால், குஜராத் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது இதுபோல் பேசியது உண்மைதான் என்கிறார்
No comments:
Post a Comment