ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா லண்டனில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி) தொடங்கி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒரு நாட்கள் இருந்தாலும் இரு நாட்கள் முன்னதாகவே கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகி விடுகின்றன. ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பெண்களுக்கான ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது.
தொடக்க நாளான நேற்று (புதன்கிழமை) பெண்கள் பிரிவில் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி வீராங்கனை ஆட்டன் 64 நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தார்.
ஜப்பான்-கனடா அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஜப்பானும், அமெரிக்கா-பிரான்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் அமெரிக்காவும், கேமரூன்-பிரேசில் அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் பிரேசிலும், சுவீடன்-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் சுவீடனும், கொலம்பியா-வடகொரியா அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் வடகொரியாவும் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment