நாட்டின் 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாட்டின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மொத்தம் 72 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
அனைத்து மாநில வாக்குப் பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு விமானங்கள் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நாடாளுமன்ற அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அவை அனைத்தும் இன்று திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அனேகமாக பிற்பகலுக்குள் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும். பெரும்பான்மையான கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கே ஆதரவாக இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவர் 25-ந் தேதி பதவியேற்க உள்ளார். புதிய குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவியேற்பு செய்து வைப்பார். புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment