எகிப்து சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தக்காளி, ஷூக்கள், வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன.
எகிப்து அதிபராக இருந்த முபாரக் ஆட்சி புரட்சியாளர்களால் முடிவு கட்டப்பட்டது. அதன் பின்னரும் அந்நாட்டில் அமைதி ஏற்படவில்லை. இந்நிலையில் அரசு முறை பயணமாக எகிப்து சென்ற போதுதான் ஹிலாரிக்கு இப்படி ஒருவரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் எகிப்து மக்கள் நின்றுவிடவில்லை. அவர்கள் போட்ட கோஷம் என்ன தெரியுமா?
"மோனிகா..மோனிகா..மோனிகா" என்பதுதான்!
அதாவது ஹிலாரியின் கணவர் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி என்ற மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தை கேலி செய்யும் விதமாக ஹிலாரியை நோக்கி இப்படி முழக்கமிட்டிருக்கின்றனர்.
எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது இஸ்ரேல் சென்றுள்ளார் ஹிலாரி.
No comments:
Post a Comment