துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் அன்சாரியை தேர்வு செய்ய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் மேற்கு வங்க கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி அல்லது சுபாஷ் சந்திரபோசின் உறவினர் கோபால் போஸ் ஆகிய 2 பேரில் ஒருவரை துணை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்த முயற்சி நடந்தது. ஆனால் அதற்கு கோபாலகிருஷ்ண காந்தி சம்மதிக்கவில்லை. துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று அவர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அன்சாரியை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment