திண்டுக்கல்லில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடாகவும், அண்ணா பிறந்த நாள் விழா மாநாடாகவும் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கரூரில் நடத்த உள்ளோம். தமிழகத்தின் வாழ்வாதாரம் அனைத்திற்கும் வெளிமாநிலங்களில் இருந்தும் மாநிலத்தின் உள்ளே இருந்தும் ஆபத்து வந்துள்ளது. கேரளாவால் முல்லைப் பெரியாறு பிரச்சினை, கர்நாடகத்தால் காவேரி நீர் பிரச்சனை, ஆந்திராவால் பாலாறு பிரச்சனை என வெளி மாநிலங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதை மத்திய அரசு தடுக்க வில்லை. நமது மாநிலத்திற்குள் மணல் படுகைகள் சுரண்டப்படுகின்றன. இதனால் இயற்கை வளம் அழிந்து போகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை தி.மு.க. ஆட்சியைப்போல் அ.தி.மு.க. ஆட்சியிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மது.
பள்ளி செல்லும் மாணவர்கள் கூட மது குடிக்க தொடங்கி விட்டனர். இது தமிழகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது மனிதச் சங்கிலி என்ற நாடகத்தை நடத்திய கருணாநிதி, தற்போது டெசோ மாநாடு என்று ஏமாற்றப்பார்க்கிறார்.
தமிழின படுகொலையில் காங்கிரஸ் அரசும், கருணாநிதியும் கூட்டு குற்றவாளிகளாக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:
Post a Comment