அசாம் மாநிலத்தில் இளம் பெண்கள் மானபங்கப்படுத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
கவுகாத்தியில் சமீபத்தில் 20 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் இளம்பெண்ணை மானபங்கப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராணுவ வீரர் ஒருவரால் இளம்பெண் மானபங்கபடுத்த முயற்சி நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் கோலயா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் காட்டுப்பகுதியில் விறகு எடுக்க சென்றார். அப்போது அங்கு ராணுவ முகாமில் இருந்த ராணுவ வீரர் அனில்குமார் அந்த பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். அப்போது அந்த பெண் கூச்சல் போட்டார்.
அவரது சத்தம் கேட்டு அந்த பகுதி கிராம மக்கள் ஓடி வந்தனர். ராணுவ வீரரிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டனர். அதோடு ராணுவ வீரர் அனில்குமாரையும் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ராணுவ வீரரை கைது செய்தனர்.

No comments:
Post a Comment