தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பட்டீலின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இது 14-வது ஜனாதிபதி தேர்தல் ஆகும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில், முன்னாள் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அவருக்கு அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களான எம்.பி.க்கள் 776 பேர் மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களான 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்கள் போடும் ஓட்டுகளின் மொத்த மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம் ஆகும்.
பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் உள்ள 63-வது அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு அளிப்பார்கள். எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போடுவார்கள். எம்.பி.க்கள் விரும்பினால், தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெற்று சொந்த மாநிலத்திலேயே ஓட்டுப்போடலாம்.
டெல்லி மேல்-சபை பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான வி.கே.அக்னிஹோத்ரி நேற்று டெல்லியில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்:
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், ஓட்டுப்போட வரும்போது அவர்கள் அந்த கடிதத்தை கொண்டு வரவேண்டும் என்றும், ஒட்டுப்போடுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் அடையாள அட்டையையோ அல்லது அந்த கடிதத்தையோ காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட 77 எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல் 7 மாநிலங்களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கு பாராளுமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை கோட்டையில் நடைபெறுகிறது.
இதற்காக சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது. வாக்குச்சீட்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டையில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்த விளக்க குறிப்புகள் கடந்த சனிக்கிழமை மாலை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலை நடத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஜவுளித்துறை இணைச்செயலாளர் சுஜித் குலாட்டி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
நேற்று மாலை சென்னை வந்த அவர் கோட்டையில், ஜனாதிபதி தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டசபை குழு கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன்பும், வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு உள்ள அறையின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை உணவு இடைவேளை இன்றி வாக்குப்பதிவு நடைபெறும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்பட 234 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போடுகிறார்கள்.
இவர்கள் தவிர, சென்னையில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றுள்ள 10 பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களும், 5 டெல்லி மேல்-சபை உறுப்பினர்களும் ஆக மொத்தம் 15 எம்.பி.க்களும் கோட்டை வாக்குச்சாவடியிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வாக்குச்சாவடியின் உள்ளே செல்போன், கார்டுலெஸ் போன், வயர்லெஸ் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் டி.வி. கேமராமேன்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடி பகுதியை படம் பிடிக்க பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் அவர்கள் யாரும் வாக்குச்சாவடியின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஓட்டுப்பெட்டி கோட்டையிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பெட்டியை தமிழக சட்டசபை செயலாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன், மற்றொரு உதவி தேர்தல் அதிகாரி கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் விமானத்தில் பாதுகாப்புடன் எடுத்துச்சென்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள்.
ஓட்டு எண்ணிக்கை 22-ந் தேதி நடைபெறுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளும் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படும். அன்று மாலைக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு அதிக ஆதரவு இருப்பதால், அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

No comments:
Post a Comment