மதுரையில் நிருபர்களிடம் நித்யானந்தா கூறியதாவது:-
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நிதி மோசடி தொடர்பாக நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக கோர்ட்டு உத்தர விட்டது. கலிபோர்னியாக வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும்தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள் அமைப்புகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களில் வாடகைதாரர்கள் காலி செய்யுமாறு எனது சீடர்கள் மிரட்டவில்லை. மருத்துவமனை, பள்ளிகளை புறநகர் பகுதியில் அமைப்பதைவிட நகருக்குள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் காலி செய்யுமாறு கூறி வருகிறோம். ஜூலை 30-ந்தேதி ஆஜராகும்படி கர்நாடக கோர்ட்டு உத்தரவிடவில்லை.
சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகும்படிதான் சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 6 மாதங்களுக்கு முன் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டேன். அங்கு சென்று வந்த பின்பு சி.பி.சி .ஐ.டி. முன் ஆஜராவேன். மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை. ஆதீன சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர் உத்தரவுபடி செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment