
சிங்களர்கள் இந்தியாவில் கால் பதிக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். பிரதமரிடமும் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, வரும் 21ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார். அவர் மத்திய பிரதேசம் சாஞ்சியில் நடைபெற இருக்கும் புத்த பல்கலைக்கழக திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்த தகவலை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment