நாடாளுமன்றத்தை தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்திருக்கும் சூழ்நிலையில் மக்களவைக்குத் திடீர் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக என்.டி.டிவி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
18 மாநிலங்களில் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 125 தொகுதிகளில் 30 ஆயிரம் பேரிடம் இதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்பு விவரங்கள்
யார் ஆட்சி?
மக்களவைக்கு இடைத்தேர்தல் வந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 207 இடங்களைக் கைப்பற்றும். பாஜக மட்டும் 143 இடங்களையும் கூட்டணிக் கட்சிகள் 64 இடங்களையும் கைப்பற்றும். கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 162 இடங்களையே பெற்றிருந்தது. (பாஜக 116/ கூட்டணிக் கட்சிகள் 46)
காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரையில் மொத்தம் 185 இடங்களில்தான் வெற்றி பெற முடியும். இதில் காங்கிரஸ் கட்சி க்கு 100 சீட்டுகள் கணிசமாக அடி விழுமாம். அதாவது கடந்த 2009 தேர்தலில் 206 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் இடைத்தேர்தல் வந்தால் 127ஐத்தான் கைப்பற்ற முடியுமாம். 2009-ல் காங்கிரஸ் கூட்டணி 264 தொகுதிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதர கட்சிகளின் ஆதிக்கம் இடைத்தேர்தல் வந்தால் அதிகரிக்குமாம். கடந்த தேர்தலில் 117 தொகுதிகளைப் பெற்ற இதர கட்சிகள் இம்முறையோ 151 தொகுதிகளைக் கைப்பற்றலாம்.
கட்சிகளுக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகள் (அடைப்புக்குள் 2009ல் பெற்ற தொகுதிகள்)
சமாஜ்வாதி 33 (23), திரிணாமுல் 27 (19), ஐக்கிய ஜனதா தளம் 25 (20), இடதுசாரிகள் 25(24), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 21(0), அதிமுக 17(9), பிஜூ ஜனாதா தளம் 14, (16), பிஎஸ்பி 15 (21)
யார் பிரதமர்?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ராகுல்காந்தி, மன்மோகன்சிங்கை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் என்றும் ராகுல்காந்தி, மன்மோகன்சிங், நிதிஷ்குமார் ஆகியோர் பகுஜன் பிரதமராக ஆதரிக்கும் என்றும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, தெலுங்குதேசம், இடதுசாரிகள் நிதிஷை ஆதரிக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் நரேந்திர மோடியைவிட நிதிஷ்குமார், எல்.கே.அத்வானி, சுஸ்மா ஸ்வராஜ் பிரதமராக வாய்ப்பிருக்கிறது என்கிறது கருத்துக் கணிப்பு
யார் இந்த நாய் நித்தீஷ்...பி.ஜெ.பி.க்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்...????
ReplyDelete