பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த சகானா நேற்று இரவு பெங்களூரில் கைதானார். இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்ட அவள் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது பெயர் ஷானு என்ற ஷகானாஸ். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகில் உள்ள புத்தன்வீடு வன்மயிலே கேட்டரை என்ற கிராமம் எனது சொந்த ஊர். பிளஸ்-2 வரை படித்து இருக்கிறேன். எனது தந்தை சிறு வயதில் இறந்து விட்டார். தாயும் என்னை பிரிந்து சென்று விட்டார்.
உள்ளூரில் துணிக்கடையில் வேலை பார்த்தேன். எனக்கும், அதே ஊரைச் சேர்ந்த சித்திக் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் எங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் அவரை விவகாரத்து செய்து விட்டேன்.
முறைப்படி இருவரும் பிரிந்து விட்டோம். கடந்த 2005-ம் ஆண்டு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு ஆள்தேவை என மலையாள பத்திரிகையில் விளம்பரம் வந்தது. அதைப் பார்த்து நான் இங்கு வந்து சம்சுதீன் என்பவரது சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சில காலம் வேலை பார்த்தேன். பின்னர் தரமணியில் உள்ள சர்க்கோ இன்பர்டஸ் என்ற கால்சென்டரில் வேலை கிடைத்தது. அப்போது நிறைய ஆண்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் நட்பு ரீதியில் பேசி பழகினேன். திருச்சியைச் சேர்ந்த சினிமா ஆர்ட் டைரக்டர் ராகுலை திருமணம் செய்து திருச்சி வேப்பூரில்அவருடன் 6 மாதம் குடும்பம் நடத்தினேன். அவரை பிரிந்து சென்னை வந்தேன்.
புரசைவாக்கத்தில் உள்ள சம்சுதீன் சூப்பர் மார்க்கெட்டில் மீண்டும் வேலைக்கு சேர்ந்தேன். அவரிடம் வீடு வாங்க வேண்டும் என்று ஏமாற்றி ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் வாங்கினேன். பின்னர் அவரை பிரிந்து வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினேன். எல்லோரிடமும் நான் வக்கீல் என்று சொன்னேன். நோட்டரி பப்ளிக் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி அவர்களிடம் ரூ.25 ஆயிரம் வீதம் பணம் பறித்தேன்.
அடையாறு சரவணன் ரூ.25 ஆயிரமும், 2 பவுன் செயினும் வாங்கிக் கொடுத்தார். முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி திருமணம் செய்தேன். 2 மாதங்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்த நான் அவரை பிரிந்தேன். இதன் பிறகு யானை கவுனியைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரையும் திருமணம் செய்தேன். மணிகண்டனுடன் நடந்த திருமணத்தை மறைத்து விட்டு அவருடன் குடும்பம் நடத்தினேன். அதன்பிறகு புளியந்தோப்பு பிரசன்னாவுடன் பழகி திருமணம் செய்தேன். இந்த 4 பேரை மட்டும்தான் திருமணம் செய்தேன்.
திருவொற்றியூர் சரவணன், அடையாறு சரவணன், தி.நகர் ராஜா, வேப்பேரி சம்சுதீன், புளியந்தோப்பு சுரேஷ் ஆகியோருடன் நான் நட்புரீதியாக பழகினேன். அவர்களை திருமணம் செய்யவில்லை. 50 பேர் 100 பேரை திருமணம் செய்தேன் என்று சொல்வது சரியல்ல. ஏராளமான ஆண் நண்பர்கள் எனக்கு உண்டு. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்களுடன் நெருங்கி பழகினேன். பலரிடம் நகை பணத்தை ஏமாற்றிப் பறித்தேன்.
இவ்வாறு சகானா கூறினார்.

No comments:
Post a Comment