ஓசூர் அருகே பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீசப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. அண்ணியின் கள்ளக்காதலை நேரில் பார்த்ததால் மாணவன் கொலை செய்யப்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இது தொடர்பாக அவரது அண்ணியை பிடித்து போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு 3 மகள்களும், இரண்டு மகன்களும் இருந்தனர். இதில் கடைசி மகன் சதீஷ் (வயது 8). இவன் உத்தனப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீடடுக்கு வந்தான். அதன் பிறகு வீட்டை விட்டு சென்ற அவன் வீட்டுக்கு திரும்பவில்லை
இந்த நிலையில் திம்மராயப்பா வீடு அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. இதை நேரில் பார்த்த கிராம மக்கள் இது குறித்து உத்தனப்பள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் மாணவன் சதீஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தான். அவனது தலையிலும், வலது கையில் கட்டை விரலிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன. போலீசார் பிணத்தை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அங்கு பிரேத பரிசோதனை நடக்கிறது.
இந்தக் கொலை குறித்து உத்தனப்பள்ளி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்தக் கொடூர கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது.
சதீஷின் அண்ணன் சங்கருக்கு திருமணமாகி கலா என்ற மனைவி உள்ளார். இவருக்கு 3 ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாலை கலா வாலிபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்தததாக கூறப்படுகிறது. இதை மாணவன் சதீஷ் நேரில் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவனை கலா கொன்றதாக தெரிய வந்து உளளது.
கலாவை இன்று போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திம்மராயப்பா வீடு அருகே படிந்து இருந்த ரத்தக்கறைகள் துணியால் துடைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்து உள்ளது.
அதாவது ஒரு இடத்தில் சதீஷ் கொலை செய்யப்பட்டு பின்னர் சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீசப்பட்டு உள்ளது. இதனால் ஒருவரே இந்தக்கொலையை செய்து இருக்க முடியாது என்று போலீசார் கருதுகிறார்கள்.
கலாவுடன் இந்த கொலையில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் மாணவனை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி சென்று வீச உதவி புரிந்தது யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இன்று மாணவனின் பிண பரிசோதனை முடிந்த பிறகு இந்த கொலையில் கைது நடவடிக்கைகள் தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா என்றும் போலீசார் கொத்தூர் கிராமத்தில் தேடி வருகிறார்கள்.

No comments:
Post a Comment