உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான தெண்டுல்கர் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து தொழில் நுட்பத்தையும் கையாண்டு விளையாடுவதில் வல்லவரான அவர் இன்று அடிக்கடி போல்ட் ஆவது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூர் டெஸ்ட் போட்டியில் நேற்று தெண்டுல்கர் 17 ரன்னில் “போல்டு” ஆனார். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரும், அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரான அவர் இப்படி மிகவும் மோசமான முறையில் ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை அளித்தது. அவரது பேடு மற்றும் பேட்டில் பட்டுதான் பந்து போல்டு ஆனது. ஐதராபாத் டெஸ்டிலும் அவர் போல்டு ஆனார்.
190-வது டெஸ்டில் விளையாடும் தெண்டுல்கர் 50-வது முறையாக “போல்டு” ஆகி உள்ளார். டெஸ்டில் அதிக முறை “போல்டு” ஆன வீரர்களில் தெண்டுல்கர் 3-வது இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 55 முறையும், ஆலன் பார்டர் 53 முறையும் “போல்டு” ஆகி உள்ளனர். போல்டு ஆவது என்பது பந்தை சந்திக்க இயலாமல் அவுட் ஆவது தான். இதனால் தெண்டுல்கரின் திறமை குறைந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் வயதானதால் அவருக்கு இந்த தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு 16 1/2 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 23 ஆண்டு காலம் விளையாடி வருகிறார். தற்போது 39 வயது ஆவதால் தெண்டுல்கரால் திறமையுடன் ஆடமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் தெண்டுல்கர் “போல்டு” ஆனதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். பேட்டுக்கும், பேடுக்கும் அதிக இடைவெளி இருந்ததாக விமர்சித்து உள்ளார். தெண்டுல்கர் கடைசியாக 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் சதம் அடித்தார். அதன்பிறகு அவர் 24 இன்னிங்சில் ஆடிவிட்டார். ஆனால் சதம் அடித்த பாடில்லை.
தெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் உடல் தகுதியுடன் இருக்கும் வரை ஆடுவேன். ஓய்வு பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று கூறி இருந்தார். அவரது ஆட்டத்தில் மெருகு குறைந்து வருவதால் நல்ல பெயருடன் ஓய்வு பெறுவது பொருத்தமாக அமையும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

No comments:
Post a Comment