Sunday, September 2, 2012

கல்யாண மோகினி சகானா கைது- பெங்களூரில் நள்ளிரவில் பிடிபட்டாள்

சென்னையை கலக்கிய கல்யாண மோகினி சகானா. கேரள அழகியான இவர் மீது கடந்த வாரம் இளைஞர்கள் பலர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்தனர். சகானா தங்களை ஏமாற்றி திருமணம் செய்து பல லட்சம் பணம் பறித்து விட்டதாக புகாரில் தெரிவித்து இருந்தனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த சகானா கணவரை விவாகரத்து செய்து பிரிந்தவர். 

புரசைவாக்கத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் தரமணியில் கால்சென்டர் வேலை கிடைத்தது. அப்போது டெலிபோனில் இளைஞர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. வசதி படைத்த இளைஞர்கள் சகானா வலையில் வீழ்ந்தனர். அவர்களுடன் ஓட்டல், பூங்கா. கடற்கரை என்று சுற்றினார். கைநிறைய பணம் புரண்டது. அத்துடன் அவரது வாழ்க்கை பாதையும் தடம் புரண்டது.

தான் சந்திக்கும் இளைஞர்களை ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை திருமணம் செய்து அவர்களுடன் கணவன்- மனைவியாக சில காலம் குடும்பம் நடத்தினார். அவர்களிடம் இருந்து நகைகள் பணத்தை கறந்துவிட்டு திடீர் என்று தலைமறைவாகி விடுவார். அடுத்து இன்னொரு இளைஞரை மணந்து குடும்பம் நடத்துவார். இப்படியே பல இளைஞர்களை திருமண வலையில் வீழ்த்தி மோசடியில் ஈடுபட்டார். 

சகானாவிடம் மோசம் போன இளைஞர்கள் இதை வெளியில் சொன்னால் அவமானம் என்று கருதி விட்டு விட்டனர். இது சகானாவுக்கு மேலும் வசதியாகி விட்டது. இதனால் சகானாவின திருமண மோசடி தொடர்ந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், அடையாறு சரவணன், தியாகராயநகர் ராஜா ஆகிய 3 இளைஞர்கள் கமிஷனர் அலுவலகம் வந்து சகானா மீது புகார் மனு கொடுத்தனர். அதில் சகானா எங்களுடன் நட்புடன் பழகினார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை ஏமாற்றி எங்களை அடுத்தடுத்து திருமணம் செய்தார். அவரது பேச்சை உண்மை என்று நம்பி நாங்களும் தாலி கட்டி குடும்பம் நடத்தினோம். ஆனால் எங்களிடம் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டது தெரியவந்தது. 

எங்களை ஒவ்வொருவராக சகானா ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தனர். திருமணத்துக்கு ஆதரவாக சகானாவுடன் எடுத்துக் கொண்ட திருமண போட்டோக்களையும் போலீசில் கொடுத்து இருந்தனர். அடையாறு சரவணன் கொடுத்த புகாரில் தன்னிடம் சகானா வக்கீல் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் நோட்டரி பப்ளிக் தேர்வு எழுதுவதற்காக ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தேன். அதன்பிறகு 2 பவுன் நகை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். 

சகானாவின் திருமண மோசடி பற்றி பத்திரிகைகளில் போட்டோவுடன் செய்தி வெளியானது. இதைப் பார்த்து சகானாவிடம் ஏமாந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவள்தான் தங்களையும் ஏமாற்றியவள் என்று கூறி மணி, பிரசன்னா, சம்சுதீன், ராகுல், புளியந்தோப்பு சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து கமிஷனர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தனர். இதில் சம்சுதீன் என்பவர் சகானா முதன் முதலில் வேலைக்கு சேர்ந்த புரசைவாக்கம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஆவார். இதுபோல் பலரை திருமணம் செய்தும் ஏராளமான இளைஞர்களிடம் காதலி போலவும் நடித்து ஏமாற்றி இருக்கலாம் என்றும் 50-க்கும் மேற்பட்டோர் வரை அவளது வலையில் விழுந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. 

இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி சகானாவை பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் சகானாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசில் புகார் வந்ததும் சகானா தலைமறைவாகி விட்டார். அவளது செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டபோது தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் சாதுர்யமாக செயல்பட்டு சகானாவை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். 

சகானா மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது பற்றியோ, தனிப்படை பற்றிய தகவல்களையோ போலீசார் வெளியிடவில்லை. சகானாவின் செல்போனில் இளைஞர்கள்போல் போலீசார் நைசாக பேசி நடமாட்டத்தை கண்காணித்தனர். அடிக்கடி சகானா இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதும், வெளிமாநிலத்துக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. கடைசியாக செல்போன் டவரை கண்காணித்தபோது பெங்களூரில் இருப்பதாக காட்டியது. சகானா பற்றி அவளது வேலூர் தோழி பிரியா முக்கிய துப்பு கொடுத்தார். 

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெஙகளூர் விரைந்து சென்று சகானாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அங்குள்ள மெஜஸ்டிக் பஸ்நிலையத்தில் சகானா போலீஸ் பிடியில் சிக்கினார். இரவோடு இரவாக போலீசார் சகானாவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார்கள். சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து தென் சென்னை இணை கதிஷனர் சண்முக ராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன், பெண் சப்-இன்ஸ்பெக்டர் சீயாத்தா, ஏட்டு ராணி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். 

அப்போது தனது திருமண மோசடி லீலைகளை போலீசில் ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தான் 50 பேரை திருமணம் செய்யவில்லை. 4 பேரை மட்டுமே திருமணம் செய்து கொண்டேன் என்றார். இதையடுத்து சகானாவை போலீசார் கைது கைது செய்தனர். 

விசாரணைக்குப்பின் சகானா மீது மோசடி, ஏமாற்றி திருமணம் செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 11.45 மணிக்கு போலீசார் வேனில் ஏற்றிச் சென்று சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். 

தற்போது அடையாறு சரவணன் கொடுத்த புகாரின் பேரில் மட்டும் சகானா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மற்றவர்கள் கொடுத்த புகார்கள் மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் விசாரணை நடைபெறும்.No comments:

Post a Comment