நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம், பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் கடந்த 8 நாட்களாக முடக்கி வருகிறது. இந்த பிரச்சினையில் பிரதமர் மன்மோகன்சிங்கும் மத்திய அரசும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பா.ஜனதா பிடிவாதமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஈரான் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய மன்மோகன்சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பாராளுமன்ற முடக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா நேற்று ஆலோசனை நடத்தினார். அதற்கு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, மன்மோகன்சிங்-சோனியா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நிலக்கரித்துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், மற்றும் மத்திய மந்திரிகள் சல்மான் குர்ஷித், கபில்சிபல் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது.
எனவே கூட்டத் தொடரின் இறுதி வாரத்திலாவது, பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பா.ஜனதாவின் ராஜினாமா கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யவும் மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment