அரசு ஊழியர் நேற்றிரவு ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் புதுவையில் விடிய விடிய பதற்றம் நிலவியது. புதுவை திப்புராயபேட்டை லசார் கோயில் வீதியை சேர்ந்தவர் மணவாளன்(32). நகராட்சி டிரைவர். இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற இவர் நேற்று வீடு திரும்பினார். நேற்றிரவு தேனீர் அருந்த சோனாம்பாளையம் டீ கடைக்கு பைக்கில் சென்றார். அங்கு ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது. வயிறு மற்றும் முதுகில் கத்திகுத்து விழுந்ததால் மணவாளன் அலறியடித்து ஓடினார். அவரை ஓடஓட விரட்டி சென்ற கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் மணவாளன் துடிதுடித்து இறந்தார்.
மேலும் ஆத்திரம் அடங்காத கும்பல் மணவாளன் வீட்டை சூறையாடி, அங்கிருந்த மணவாளனின் உறவினர் நாகமுத்துவை(58) அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவானது. தகவல் அறிந்து வந்த போலீசார் மணவாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நாகமுத்துவை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், திப்புராயப்பேட்டை, வம்பாகீரப்பாளையத்தில் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் புதுவையில் நேற்று விடிய விடிய பதற்றம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment