Friday, September 7, 2012

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் லியாண்டர் பெயஸ் ஜோடி தேர்வு


அமெரிக்கா நியூயார்க் நகரில், கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர்  பெயஸ் மற்றும் செக் ரிபப்ளிக்கின் ராடெக் ஸ்டெபானெக்  ஜோடி, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்செல் க்ரனோலர்ஸ் மற்றும் மார்க் லோபஸ் ஆகியோரை சந்தித்து வெற்றிபெற்றது.
 
நடைபெறும் மற்றொரு அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெறும் வீரர்களை இவர்கள் இறுதிப்போட்டியில் இன்று சந்திக்க உள்ளனர்.
 
போட்டிக்கு பிறகு பார்வையாளர்கள் மத்தியில் பேசிய லியாண்டர் பெயஸ், நான் மார்க் லோபஸ்க்காக வருந்துகிறேன். அவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள். நாங்கள் உங்களை சந்தோசப்படுத்தவே இங்கு வந்திருக்கிறோம். நான் சிறந்த விளையாட்டு வீரரை ஜோடியாக பெற்றது மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவோம்.
 
இவ்வாறு லியாண்டர் பெயஸ் கூறினார்.


No comments:

Post a Comment