அன்னாஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் இடிந்தகரைக்கு நேற்று இரவு வந்தார். வெகுநேரம் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் பந்தலிலேயே இருந்தார். அப்போது பேசிய அவர் உதயக்குமார் சரணடைய தேவையில்லை. உதயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
பின்னர் அவர், நள்ளிரவில் இடிந்தகரையில் உள்ள பாதிரியார் பங்களாவிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசியஇடத்தில் இருக்கும் உதயகுமாரை சந்திப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ரகசியமாக சென்றுள்ளார்.
இதற்காக அவரை போராட்டக்குழுவை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இன்றுஅதிகாலை இடிந்தகரை கடற்கரையில் இருந்து படகு மூலம் அழைத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று போலீஸ் அதிகாரிகள், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசும்போது, உதயகுமாரை சரணடைய வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆகவே அதுபற்றி பேசுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், உதயகுமாரை சந்திக்க சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment