மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மும்பையில் வாழும் பீகார் மக்கள் மாநிலம் கடந்து ஊடுருவியவர்கள் என்றும், அவர்கள் மும்பையில் இருந்து விரட்டி அடிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
ராஜ்தாக்கரேயின் இந்த பேச்சு வன்முறையை தூண்டுவது போல் உள்ளது எனவும், அது பீகார் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதுபோல் உள்ளது எனவும், சமூகத்தில் நிலவும் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதுபோல் உள்ளது எனவும், சமூகநல ஆர்வலர் பிரேஷ் பாண்டே நேற்று பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
No comments:
Post a Comment