எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் பல்வேறு நலத் திட்டப்பணிகளை செய்வதற்காக மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இந்த நிதியை கொண்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் எம்.பி.க்கள் சிறு, சிறு பணிகளை செய்து கொடுக்க முடியும். நடப்பாண்டிலும் எம்.பி.க்களுக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுகிய காலத்துக்குள் 110 எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை செய்தனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மற்றும் மேனகா காந்தி அவரது மகன் வருண் காந்தி ஆகிய 4 பேரும் நடப்பாண்டில் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்யவில்லை.
அந்த நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுத்து தங்கள் தொகுதி மக்களுக்கு செலவிடவில்லை. கடந்த ஆண்டும் சோனியா, ராகுல் இருவரும் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவிடவில்லை. ஆனால் மேனகாவும், வருணும் கடந்த ஆண்டு ரூ.5 கோடியையும் முழுமையாக செலவிட்டிருந்தனர்.
தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடுவதில் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் உள்ளார். அவர் உடனுக்குடன் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்து வருகிறார்.
தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு எம்.பி. முறையாக செலவிடாவிட்டால் அந்த பணம் திரும்பப் பெறப்படும். பிறகு அந்த பணம், ஏற்கனவே நிதி பெற்று முழுவதையும் செலவு செய்துவிட்ட எம்.பி.க்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள்.

No comments:
Post a Comment