சென்னை கிண்டியில் நேற்று தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் சென்னை துறைமுக சுங்க முகவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கப்பல் துறையின் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தென்னிந்திய வர்த்தக கூட்டமைப்பு மற்றும் சென்னை துறைமுக சுங்க முகவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கப்பல் வாணிப கருத்தரங்கம் நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் 2020ல் கடல் வாணிபத்திற்கு ஏற்ற வகையில் அமையும் என நம்புகிறேன்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் மத்திய ராணுவ மந்திரி அந்தோணியை சந்தித்து பேசினார்கள். நானும் அவரை சந்தித்து வலியுறுத்தினேன். இதில் தமிழகத்தின் கோரிக்கைக்கு நல்ல முடிவு எடுக்கப்படும்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது சரியானதல்ல. இது முறையான செயல் கிடையாது. இந்தியாவிற்கு ஆன்மிக, கலாச்சார விளையாட்டு என வருபவர்களை தாக்கக்கூடாது. இதில் அரசியல் சாயம் பூசக்கூடாது. ராணுவ பயிற்சிக்கும், கலாசார பயணத்திற்கும் அரசியல் உணர்வு கலக்க கூடாது.
இலங்கையில் தமிழர்கள் வாழ்வு மேம்படுத்தப்பட வேண்டும். சிங்களர்களுக்கு இணையான அதிகாரம் கிடைக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைப்பற்றி தமிழக மீனவ பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து எடுத்துக்கூறினார்கள். மீனவர்கள் பாதிப்பின்றி இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு பாஜகவினரே பொறுப்பேற்க வேண்டும். நிலக்கரி பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி நியாயமாக செயல்படுகிறது. இதுபற்றி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தெளிவாக பதில் அளித்து உள்ளனர்.
இதே பிரச்சினைக்காக பாராளுமன்றத்தை பா.ஜனதா கட்சி முடக்கியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. ஏராளமான பணம் விரயமாகி உள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சி தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நிலக்கரி சுரங்க பிரச்சினையில் சி.பி.ஐ. நியாயமாக பராபட்சமின்றி விசாரித்து வருகிறது.
இவ்வாறு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
வந்துட்டாரு வெண்ணை வெட்டி சூ
ReplyDelete