தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தோடு ஓய்வுக்காக தென் கொரியாவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார். 8 நாட்கள் அங்கு தங்கி ஓய்வெடுத்து விட்டு ஊர் திரும்பவுள்ளாராம்.
அரசியல் தலைவர்கள் தீவிர அரசியல் பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது பிரேக் எடுத்து ஓய்வெடுப்பது வழக்கம். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி தீவிரப் பணிகளுக்கு மத்தியில் எப்போதாவது மாமல்லபுரம் அல்லது பெங்களூர் செல்வது வழக்கம். இருப்பினும் இவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் ஓய்வெடுத்தது கிடையாது, இதுவரை.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தனது குடும்பத்தோடு அவ்வப்போது ஓய்வுக்காக வெளிநாடு செல்வதை வழக்கமாக்கி வருகிறார்.
கடந்த ஒன்றரை மாதமாக தமிழகம் முழுவதும் மனைவி பிரேமலதாவோடு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜயகாந்த் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று தனது குடும்பதோடு தென் கொரியாவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் விஜயகாந்த். 8 நாட்கதள் அங்கு தங்கியிருப்பாராம் விஜயகாந்த். செப்டம்பர் 16ம் தேதிதாதன் சென்னை திரும்பவுள்ளார் விஜயகாந்த்.
No comments:
Post a Comment