ஈரான் பாதாள அறைகளில் அணு உலையை அமைத்து அதன் மூலம் அணு குண்டுகளை தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் அதை மறுக்கும் ஈரான் அணு சக்தியை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக கூறுகிறது.
இப்பிரச்சினை தொடர்பாக சர்வதேச அணு சக்தி ஏஜன்சியினர் பல்வேறு வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க அமெரிக்கா, ரஷியா உள்பட 6 நாட்டு தூதர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஷிய வெளியுறவு துணை மந்திரி செர்கி ரியாப்கோவ் இடம் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் ஈரான் கடந்த சில மாதங்களில் அணுசக்தி பொருட்களை தீவிரமாக பயன்படுத்தி வருவதாக புதிய புகார் கூறப்பட்டது. எனவே ஈரானுக்கு இஸ்ரேல் அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறது. ராணுவ நடவடிக்கை எடுத்து ஈரான் அணு உலைகளை அழிப்போம் என்று கூறி வருகிறது.
இதற்கிடையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடாது என்று ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவு துணை மந்திரி செர்கி ரியாப்கோவ் கூறியதாவது:-
ஈரான் அணு குண்டு தயாரிப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை. அங்கு ராணுவ பயன்பாட்டிற்காக அணுசக்தி பொருட்கள் திருப்பி விடப்படவில்லை என்பதை சர்வதேச குழு அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆதலால் இந்த அணு உலை பிரச்சினைக்காக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் வேறு நாடுகள் தாக்குதல் எதையும் நடத்தக் கூடாது.
ராணுவ நடவடிக்கை விவேகமாக இருக்காது என எச்சரிக்கிறோம். அதை மீறி தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கு பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும். அந்த பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், பாதுகாப்பு, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன்னுடைய நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் முஸ்லீம்களின் பயங்கரவாத செயல்களைக் சந்தித்த பின்னுமா ரஷ்யா முஸ்லீம் பயங்கரவாதிகளைத் தன்னுள்ளே கொண்டுள்ள ஈரான் நாட்டிற்கு ஆதரவுதருகிறது...?????வேடிக்கைதான்...
ReplyDelete